இந்திய நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் பகுதியின் உயர்ந்த மலைப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று பனிப்புயல் மற்றும் பனிப்பாறைகளின் சரிவு ஆகியவற்றால் தாக்கப்பட்டதில் 17 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளத்தாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதில் காயமடைந்த அனைவரும் ஆபத்தான நிலையை கடந்து விட்டதாகவும் இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

ஸ்ரீநகரின் வடமேற்கே மலையுச்சியில் இருக்கும் இந்த போர் நுணுக்க பயிற்சிக் கல்லூரி பனிப்புயலின் காரணமாக முற்றாக மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் தொடர்ந்து பனிப் புயலும் கடும் சூறாவளிக் காற்று வீசி வருவதாலும், மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன. தகவல் தொடர்புகளும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன

ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி மக்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டன இயக்கம் ஒன்று பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வன்செயலுக்கு எதிரான இயக்கம் என்று பெயர் கொண்ட இந்த இயக்கம், ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய உணவகங்களில் ஆஸ்திரேலிய மக்கள் சென்று உணவருந்துவதை ஊக்குவிப்பது இந்த அமைப்பின் நோக்கமக உள்ளது.

மெல்பர்ண் நகரில் ஒரு சாதாரண கணினி இணைய பக்கமாக ஆரம்பித்து ஆதரவு அளிக்க விரும்புவோர் கைச்சாத்திடுங்கள் என்று கேட்டு, கணினி வலையத்தில், சமூக நட்பு இணைய தளங்கள் மூலம் இந்த இயக்கம் வேகமாக பரவியுள்ளது.

இந்தியாவிலிருந்து செல்லும் மக்கள் மீது, குறிப்பாக மாணவர்கள் மீது சிட்ணி, மெல்பர்ண் நகரங்களில் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு தோன்றியுள்ளது.

சீக்கியர்கள் மதரீதியாக அணியும் கிர்பான் எனும் உடைவாளை பிரிட்டனில் வாழும் சீக்கியர்கள் பள்ளிக்கூடங்களுக்கும், இதர பொது இடங்களுக்கும் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, பிரிட்டனின் முதலாவது சீக்கிய நீதிபதியான சர் மோட்டா சிங் கேட்டுள்ளார்.

பள்ளிக்கூடங்களில் அதை தடை செய்வது தவறு என்று அவர் குறிப்பாக பள்ளிகள் மீது கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீக்கிய மத சிறுவர்கள், தீட்சை பெற்ற சீக்கியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஐந்து கோட்பாடுகளில் கிர்பான் அணிவதும் ஒன்று. பிரிட்டனில் உடைவாள் அணிந்த சீக்கியர்கள் பொது இடங்களுக்கு நுழைவது தடைசெய்யப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன

இரான் தனது அணுசக்தி திட்டத்தை துரிதப்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு எதிராக புதிய அனைத்துலக ஏற்றுமதி தடைகளை கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.

மேற்குலக நாடுகளின் இந்தக் கருத்தை இரான் நிராகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்க்க அனைத்துலக நாடுகள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் என்று பாரிஸ் நகரில் கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரானின் நடவடிக்கைகள் மிரட்டும் வகையில் உள்ளது என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். யுரேனியச் செறிவூட்டலை மேலும் மேம்படுத்த தாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்காக அடுத்த ஆண்டு மேலும் பல ஆலைகளை நிறுவ தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இரான் அறிவித்துள்ளது

உக்ரைன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில், ஜனாயகம் சிறப்பாக புலனாகியது என்று அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் தீர்ப்பை மதித்து, அதிகாரத்தை முறைப்படி கையளிக்க உக்ரைனியத் தலைவர்கள் தயாராக வேண்டும் என்று ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவுக்கான அமைப்பு கேட்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைவரான ஜோஸ் சோயரஸ் கருத்து வெளியிடும் போது உக்ரையினின் தேர்தல் ஆணையம் ஒளிவு மறைவின்றி பாரபட்சமற்ற முறையில் செயற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எதிர்கட்சித் தலைவரான விக்டர் யானுகோவிட்ச் மிகச்சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார் என்று உக்ரையின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் சிறு வயது பள்ளி மாணவிகளை அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்த பள்ளி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஹாங்காங் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஹென்ரி சான் என்ற ஆசிரியர் மாணவிகளை ஆபாசமாக படமெடுப்பதாக புகார் எழுந்தது.

32 வயதான இந்த ஆசிரியர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பொய்யான காரணங்களைக் கூறி தனது வீட்டிற்கு வரவழைக்கிறார் என்றும் அங்கு மாணவிகளை அரைகுறை ஆடைகளுடன் படம் எடுக்கிறார் என்றும் புகார் கூறப்பட்டது.

போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர். ஆசிரியர் இதுபோல பல மாணவிகளை வீட்டிற்கும் ஹோட்டல்களுக்கும் வரவழைத்து படங்கள் எடுத்து பணமும் கொடுத்து வந்ததாக தெரியவந்தது.

ஆசிரியர், 11 வயதில் இருந்து 15 வயது வரை உள்ள மாணவிகளை இவ்வாறு படம் எடுத்துள்ளார். சிறுமிகளை பாலியல் விவகாரங்களுக்கு பயன்படுத்தும் குற்றத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஹென்ரி சான் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து மாணவிகளின் 1600 நிர்வாண படங்கள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இராபர்ட் கேட்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்தப் பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டிருக்கும் இரட்டை வேடம் பளிச்சென்று தெரியும்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன், “இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலை குறித்தும், சீனா இராணுவம் நவீனமயப்படுத்துவதும், அந்நாடு தனது இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்வதன் நோக்கம் குறித்தும் பேசியதாக” இராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சீனா ஒரு இராணுவப் பெரும் சக்தியாக உருவெடுப்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கவலையளிக்கக் கூடியதாகும் என்றும் கூறியுள்ளார்.

சீனா இராணுவ பெருக்கம் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச வேண்டும் என்றும் ஆலோசனை அளித்ததாகக் கூறுகிறார்.

இந்திய, சீன எல்லையில் எண்ணிடங்கா ஊடுவல், அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கு எதிர்ப்பு, பிரதமரின் அலுவலக கணினிகளில் உள்ள தகவல்களை எடுக்கும் முயற்சி என்று சீனத்திற்கு இந்தியாவிற்கும் இடையே சிக்கல் நிறைந்த ஒரு சூழலில் டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர், அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு முக்கியமான இடத்தைத் தந்துள்ளது போல, “ தெற்காசியாவிலும், உலக அளவிலும் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்களில் இந்தியா ஒரு நங்கூரமாக இருந்து வருகிறது” என்று புகழ்ந்துள்ளார்.

இராபர்ட் கேட்ஸ் கூறிய வார்த்தைகளையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் வாசகங்களுடன் ஒப்புட்டுப் பார்த்தால் அமெரிக்கா போடும் இரட்டை வேடம் தெளிவாகத் தெரியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி ஒபாமாவும் ஹூ ஜிந்தாவோவும் வெளியிட்ட அந்தக் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் இதுதான்: “. The U.S. side reiterated that it welcomes a strong, prosperous and successful China that plays a greater role in world affairs”. இதன் பொருள்: “உலக விவகாரங்களில் பெரும் பங்கு வகிக்கும் அளவிற்கு வலிமையான, செழுமையான, வெற்றிகரமான நாடாக சீனா இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது”.

கூட்டறிக்கையில் இவ்வாறு கூறியது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமைதி ஏற்படுத்த சீனா…

உதவிட வேண்டும் என்றும், இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட சீனா உதவ வேண்டும் என்று ஒபாமா கேட்டுக் கொண்டார் என்ற செய்தியும் வந்தது. அவ்வளவுதான் கொதித்தெழுந்தது டெல்லி. “தனது அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள இந்தியாவிற்கு எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் அவசியமல்ல” என்று அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் உடனடியாக அறிக்கை விடுத்துக் கண்டித்தார்.

சீனா வலிமையாக இருக்க வேண்டும், உலக விவகாரங்களில் அதன் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும், தெற்காசியாவின் அமைதியில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றெல்லாம் கூறிவிட்டு, இப்போது, சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் அச்சுறுத்தலே என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் இந்தியாவில் வந்து கூறுவது ஏன்?

உலக விவகாரங்களில் சீனாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்று பீஜிங்கில் சீன அதிபரோடு நின்றுகொண்டு ஒபாமா அறிக்கை வெளியிடுகிறார். டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர், உலக மற்றும் தெற்காசிய மண்டலத்தின் பாதுகாப்பில் இந்தியா நங்கூரமாக இருக்கிறது என்று கூறிகிறார்!

சீனாவிற்குப் போனால் அந்நாட்டை மையப்படுத்தி, பெருமைபடுத்திப் பேசுவது, டெல்லிக்கு வந்தால் இந்தியாவை பெருமைப்படுத்தி பேசுவதா? இதற்குப் பெயர்தான் இராஜதந்திரமா?

சீன இராணுவம் நவீனமயமாக்கலையும், பலப்படுத்துதலையும் குறித்து இந்தியா பேச வேண்டும் என்று ஆலோசனை கூறும் அமெரிக்கா அதைச் செய்யலாமே?

பயங்கரவாத அணுகுமுறையிலும் இரட்டை நிலை

அல் கய்தா இயக்கமே அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் இணைக்கும் குடையாக உள்ளதென்றும், அதன் கீழ்தான் தாலிபான், தெரிக் இ தாலிபான் பாகிஸ்தான், லஸ்கர் இ தயீபா ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இயங்குகின்றன என்று கூறுகிறார்.

ஆனால், இந்த இயக்கங்களின் வளர்ச்சியிலும், தாக்குதல் திட்டத்திலும் பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஜ.யின் கை உள்ளதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாற்றிவருவது குறித்து எதையும் கூறாமல் தவிர்த்துவிடுகிறார்.ஏனென்றால், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவின் நண்பன் பாகிஸ்தான்!

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று இந்தியாவிற்கு அறிவுரை கூறும் அமெரிக்கா, பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறுவதை சரியென்றோ தவறென்றோ இதுநாள் வரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

இந்தியா எனும் பெரும் சந்தை வேண்டும், அணு உலைகளுக்கும், ஆயுதங்களுக்கும் அந்நாடு அளிக்கும் ஒப்பந்தங்கள் வேண்டும். ஆனால் அந்நாட்டு பாதுகாப்பு குறித்து அது அதன் அண்டை நாடுகளுடன் பேச வேண்டும்!

இதுதான் அமெரிக்காவின் நட்பு, இந்நாட்டுடன்தான் இந்தியா பலமான உறவு கொணடுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறுகிறார்.

இந்தியாவுடனான உறவு தங்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகி உள்ள நிலையில், இந்தியாவுடனான அமெரிக்க உறவு மிகவும் முக்கியமானதும், தீவிரமானதுமாகும் என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் மைக் ஹேமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அவர் தனது இந்திய பயணத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் மைக் கூறினார்.

அதே சமயம் ஒபாமாவின் இந்திய பயணம் எப்போது என்பதற்கான உறுதியான தேதியை தெரிவிக்க இயலாது என்றும் மைக் தெரிவித்தார்.

மும்பைத் தாக்குதல் போல் தினமும் பயங்கரவாதத் செயல்களை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் அரசால், இந்தியாவில் மீண்டும் மும்பைத் தாக்குதல் போன்ற பயங்கரவாதச் செயல் நடைபெறாது என உத்தரவாதம் அளிக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை பாகிஸ்தான் சென்ற ராபர்ட் கேட்ஸ், பிரதமர் கிலானியை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில், “மும்பைத் தாக்குதலுக்கு இணையான பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் தினமும் எதிர்கொள்கிறது. எங்கள் நாட்டு மக்களையே எங்களால் பாதுகாக்க முடியாத நிலையில், இந்தியாவில் மும்பைத் தாக்குதல் போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என நாங்கள் எப்படி உறுதியளிக்க முடியும்” என்று ராபர்ட் கேட்ஸிடம் கிலானி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் டான் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், “பாகிஸ்தானில் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்ஸிடம் கிலானி விரிவாக எடுத்துரைத்ததாக” கூறப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தமது தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக, ஒஸாமா பின்லேடனின் நான்காவது மகன் ஒமர் பின்லேடன் கூறியுள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகும் ‘ரோலிங் ஸ்டோன்’ என்ற ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள ஒமர், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

2001 ஆம் ஆண்டு புஷ் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது என் தந்தை ரொம்பவும் மகிழ்ந்தார்.

ஏனெனில், புஷ் தான் அமெரிக்காவுக்கு அப்போது தேவைப்பட்ட தலைவர் என்று அவர் கூறினார்.பிறநாடுகளின் மீது தாக்குதல் நடத்தி, அதற்காக பணத்தை செலவிட்டே நாட்டை அழித்து விடுவார் என்று என் தந்தை கணித்து இருந்தார்.

அதேப்போன்று இப்போது பராக் ஒபாமாவுக்குப் பதிலாக மெக்கெய்ன் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று எனது தந்தை விரும்பியிருப்பார் என்பதையும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.ஏனெனில் மெக்கெய்னும் புஷ்சைப் போன்ற எண்ணம் உள்ளவர்தான்.ஆனால் ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனது தந்தை ( பின்லேடன் ) நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருப்பார்.

என் தந்தையை கொன்றால், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு அதில் ஒமர் கூறியுள்ளார்.

Next Page »